மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாரத்தில் உள்ள 51 ஊராட்சிகளிலும் 2009ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்பட்டுவரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு மதிப்பூதியமாக ரூபாய் 500 முதல் ரூபாய் 2000 வரை வழங்கப்பட்டு வந்ததை 2015இல் நிறுத்திவிட்டனர். இருப்பினும் மதிப்பூதியம் இல்லாமல் ஊராட்சியில் உள்ள அனைத்து ஆன்லைன் பணிகளையும் செய்து வருகின்றனர். 2017-2018ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கையில், வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் எம்ஜிஎன்ஆர்எஸ் கணக்கு எழுதுவதற்கு மாதம் ரூபாய் 3 ஆயிரம் ஊதியமாகத் தருவதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஆணை திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில் குத்தாலம் வட்டார கிராம வறுமை ஒழிப்பு சங்க ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிங்க:அதிமுக அடிக்கிற அடியில் திமுக எங்கே இருக்கிறது என்று தெரியாமல் போகும்- அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்