ETV Bharat / state

நாகையில் தனியார் கல்லூரியில் களைகட்டிய சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்..! - Pongal Festival

Pongal Celebration: நாகை தனியார் கல்லூரியில் கட்டக்கால் ஆட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் என களைக்கட்டிய சமத்துவ பொங்கல் விழாவில் மாணவ, மாணவிகள் பங்கேற்று உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.

Pongal Festival Celebration at Nagapattinam Private College
நாகை தனியார் கல்லூரியில் களைகட்டிய சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 5:40 PM IST

நாகப்பட்டினம்: பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் களைக்கட்டும். அந்த வகையில், நாகை தனியார் கல்லூரியில் கட்டக்கால் ஆட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் என களைக்கட்டிய சமத்துவ பொங்கல் விழாவில் மாணவ, மாணவிகள் பங்கேற்று உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகையைக் கொண்டாடத் தமிழக மக்கள் தயாராகி வருகின்றனர். அதன்படி, கல்வி நிறுவனங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றது. அந்த வகையில், நாகப்பட்டினத்தில் உள்ள EGS பிள்ளை தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று (ஜன.10) வெகு விமரிசையாக நடைபெற்றது.

பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி போராசியர்கள் கலந்து கொண்டனர். பொங்கல் விழாவை முன்னிட்டு சூரியபகவானுக்குப் படையலிட்டுப் பூஜைசெய்த கல்லூரி மாணவ, மாணவிகள் கரும்புகள் கொண்டு அலங்கரித்து, தோரணங்கள் கட்டி புதுப்பானையில் பொங்கல் வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, மண் பானையில் வைக்கப்பட்ட பொங்கல் பொங்கிவர அனைவரும் பொங்கலோ பொங்கல் எனக் கூறி உற்சாகத்துடன் சமத்துவ பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்தனர். சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு கட்டக்கால் ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், உள்ளிட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியாக பொங்கலைக் கொண்டாடினர்.

மேலும், மாணவர்கள் எல்லோரும் மாட்டு வண்டி ஓட்டி வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கல்லூரியில் படிக்கும் அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டது தங்களுக்கு மகிழ்ச்சி அளித்ததாகவும், மேலும் தமிழின கலாச்சாரப்படி பெண்கள் புடவையிலும், ஆண்கள் வேஷ்டியிலும் வந்து விழாவில் கலந்துகொண்டது பெருமையாக இருந்ததாகவும் மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது" - அமைச்சர் முத்துசாமி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.