நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு கட்டட தொழிலாளர்கள் சங்கத் தலைவர் பொன். குமார் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஆளும் கட்சி ஆதரவுடன் மணல் கொள்ளை நடைபெற்றுவருகிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுகிறது.

இதற்கு அமைச்சர்கள், அரசுத் துறை அலுவலர்கள் உடந்தையாக உள்ளனர். அதேசமயம் மணல் தட்டுப்பாட்டால் தமிழ்நாட்டில் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான தொழில் பின்னடைவால் பொருளாதார மந்தம் ஏற்பட்டு உள்ளது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் வெளிநாடு பயணம் என்ற பெயரில் சுற்றுலா சென்றுள்ளனர்.
அவர்கள் மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் பதவியிலிருக்கும்வரை சுருட்டுவது என்கின்ற கொள்கையோடு செயல்படுகின்றனர்" எனத் தெரிவித்தார்.