ETV Bharat / state

பாலியல் பலாத்காரப் புகாரை ஏற்க மறுக்கும் காவலர்கள்: பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் மனு! - தரங்கம்பாடி செய்திகள்

பெரம்பூர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி அளித்த பாலியல் புகார் மனுவின் மீது காவலர்கள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும், சமரசமாக போகச்சொல்லி மிரட்டுவதாகவும், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் தன்குடும்பத்தினருடன் வந்து புகார் மனு அளித்தார்.

Police refuse
Police refuse
author img

By

Published : Nov 20, 2020, 6:29 AM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எரவாஞ்சேரி மேலத்தெருவைச் சேர்ந்தவர் ராம்கி, இவரது மனைவி ரேவதி (28).

ராம்கி சென்னையில் வேலை பார்த்து வரும் நிலையில், கடந்த மாதம் 29ஆம் தேதி ரேவதி தனது இரண்டு குழந்தைகளுடன் அவரது வீட்டில் தூங்கியுள்ளார்.

அப்போது, அதே தெருவைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ஜெயபிரகாஷ் என்பவர் நள்ளிரவில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து ரேவதியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து, ரேவதி கூச்சலிட்டத்தில் ஜெயப்பிரகாஷ் தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து, பெரம்பூர் காவல் நிலையம் மற்றும் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரேவதி புகார் அளித்துள்ளார். அப்புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததோடு, பெரம்பூர் காவல்நிலையத்தினர் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு சமாதானமாக போகச் சொல்லி ரேவதியை மிரட்டியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட ரேவதி, அவரது கணவர் ராம்கி மற்றும் உறவினர்கள் இன்று (நவ.19) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஜெயப்பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனு அளித்தனர்.

இதையும் படிங்க: சொத்துகளைப் பிடிங்கி தந்தையை கைவிட்ட மகன்கள்: அதிரடி நடவடிக்கையால் சொத்துகளை மீட்ட ஆர்டிஓ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.