ETV Bharat / state

'காவலர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்!' - காவலர்கள் தலைக்கவசம்

நாகப்பட்டினம்: இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் காவலர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு காவலர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும் நாகை காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

police
author img

By

Published : Aug 8, 2019, 7:33 PM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் நிலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாகனங்கள் பழுதில்லாமல் நல்லமுறையில் பராமரிக்கவேண்டும் என்று காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆய்வு மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன்
ஆய்வு மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன்

மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் காவலர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், அதேபோல நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் காவலர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். பொதுமக்களுக்கு எப்போதும் காவல் துறையினர் முன்னுதாரணமாக திகழவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஜூலை மாதம் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வரும் அனைவரும் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களுக்கும் உள்ளே அனுமதி இல்லை என்ற உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Intro:காவலர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் உத்தரவு.
Body:காவலர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் உத்தரவு.

நாகை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், வாகனங்கள் பழுதில்லாமல் நல்லமுறையில்
பராமரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் காவலர்கள் கட்டாயம்
தலைகவசம் அணிய வேண்டும் என்றும் அதே போல நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் காவலர்கள் கட்டாயம்
சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டவர், பொதுமக்களுக்கு எப்போதும் காவல்துறையினர் முன்னுதாரணமாக திகழவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கடந்த மாதம் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு இருசக்கர சக்கர வாகனத்தில் வரும் அனைவரும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் எனவும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களுக்கும் உள்ளே அனுமதி இல்லை என்ற உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஹெல்மெட் முக்கியம் குறித்தும் ,ஹெல்மெட் அணிவதை கட்டாய படுத்துவதற்காக இவர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவது, பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.