நாகப்பட்டினம்: கீழ்வேளூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த வேத. முகுந்தனுக்குப் பதிலாக வடிவேல் ராவணன் என்பவரை புதிய வேட்பாளராக பாமக தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
முன்னதாக இதே தொகுதி அமமுக கூட்டணியில், தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. சில காரணங்களுக்காக இத்தொகுதியை அமமுகவே திரும்பப் பெற்றுக்கொண்டது.
இத்தொகுதியின் எம்எல்ஏவாக திமுகவின் உ. மதிவாணன் இருக்கும் நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இத்தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது.
இதையும் படிங்க: கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்!