நாகை மாவட்டம் பாப்பாகோவில், நரியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயம் நடைபெற்றுவருகிறது. பொங்கலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் அறுவடைக்குத் தயாராக உள்ள விவசாயிகளின் விளைநிலத்திற்குள் பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்துவருகின்றன.
சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்களை இரவு நேரங்களில் விளைநிலத்திற்குள் புகுந்து பன்றிகள் நெல்மணிகளைக் குதறி சேதப்படுத்திவருவதால் பாப்பாகோவில், நரியங்குடி விவசாயிகளுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பன்றிகளின் அட்டகாசத்தால் பாதிப்புக்குள்ளான கடைமடை விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். எனவே விவசாயிகளின் விளைநிலத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் பன்றிகளைக் கட்டுப்படுத்த உள்ளாட்சித் துறை பிரதிநிதிகள், வேளாண் துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளி கட்டடத்தை இடிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!