மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மத்திய சமூகநீதி அமைச்சகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணம், மதிப்பீடு மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்காக சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார். முகாமில் மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிய மனநலம், காது, கண், எலும்பு மற்றும் முடநீக்கியியல் வல்லுநர்கள் கொண்ட மருத்துவக்குழுவினர் மாற்றுத்திறனாளிகளை சோதனை செய்தனர்.
ஏற்கனவே விண்ணப்பித்து தகுதி உடைய நபர்களுக்கு உபகரணங்கள் மற்றும் அடையாள அட்டைகளை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை, குத்தாலம் வட்டாரத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'வரும் காலம் பாஜக காலம்!'