ETV Bharat / state

குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்! - water problem on nagapattinam

நாகை: மயிலாடுதுறை அருகே குடிநீர் வழங்கக் கோரி காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்

people protest for water
author img

By

Published : Sep 19, 2019, 7:40 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குளிச்சாறு கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இணைப்பு குழாய்கள் பழுதடைந்ததால் கடந்த ஆறு மாதங்களாக முறையாக தண்ணீர் வரவில்லை. எனவே அவர்கள் வீட்டின் முன்பு குழிதோண்டி தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

ஆனால், அந்த குடிநீர் சுகாதாரமற்ற முறையில் வருவதாகவும் அதை குடிப்பதால் காய்ச்சல் ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படுவதாக கூறி குளிச்சாறு மெயின்ரோட்டில் அரசு பேருந்தை வழிமறித்து கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுத்தமான குடிநீர் வழங்கக் கோரியும், பழுதடைந்துள்ள குடிநீர் மினி டேங்கை சரி செய்ய வேண்டும், பொது கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இச்சம்பவத்தை அறிந்த மயிலாடுதுறை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செம்பனார்கோவில் காவல் துறையினர் பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

குடிநீர் வழங்கக்கோரி சாலைமறியல்!
உடனடியாக இணைப்பு குழாய்களை மாற்றித் தருவதாக அலுவலர்கள் கூறியதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

Intro:மயிலாடுதுறை அருகே குடிநீர் வழங்க கோரி காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குளிச்சாறு கிராமத்தில் உள்ள தெற்க்;கு தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இணைப்பு குழாய்கள் பழுதடைந்ததால் கடந்த ஆறு மாதமாக முறையாக தண்ணீர் வரவில்லை. இதனால் வீட்டின் முன்பு குழிதோண்டி தண்ணீர் பிடித்து வருகின்றனர். வரும் குடிநீரும் சுகாதாரமற்ற முறையில் வருவதாகவும் அதை குடிப்பதால் காய்ச்சல் ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படுவதாக குற்றம் சாட்டி குளிச்சாறு மெயின்ரோட்டில் அரசு பேருந்தை வழிமறித்து கிராமமக்கள் காலிகுடங்களுடன் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுத்தமான குடிநீர் வழங்க கோரியும், பழுதடைந்துள்ள குடிநீர் மினிடேங்கை சரி செய்ய வேண்டும், பொதுகழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் அறிந்த மயிலாடுதுறை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மயில்விழி மற்றும் செம்பனார்கோவில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். உடனடியாக இணைப்பு குழாய்களை மாற்றி தருவதாக கூறியதால் போராட்டத்தை விலக்கி கொண்டனர். இதனால் மயிலாடுதுறை - வடகரை சாலையில் 1மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேட்டி: ராஜா கிராமவாசி Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.