ETV Bharat / state

மயிலாடுதுறையில் ஊராட்சி துப்புரவு பணியாளர்களை தடுத்து நிறுத்தி போராட்டம்!

மயிலாடுதுறை: ஆக்கூர் ஊராட்சி குடியிருப்பு பகுதியிலுள்ள குப்பை கிடங்கில் தரம்பிரிக்கப்படாமல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகக் கூறி போராட்டம் நடத்திய அப்பகுதி குடியிருப்புவாசிகள், குப்பை கொட்ட வந்த ஊராட்சி துப்புரவு பணியாளர்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி துப்புரவு பணியாளர்களை தடுத்து நிறுத்தி போராட்டம்

author img

By

Published : Dec 1, 2020, 10:48 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் ஊராட்சியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அரசுக்குச் சொந்தமான சௌரியாபுரம் பொட்டல்வெளி திடலில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்தப் பகுதியில் வீடு இல்லாத ஏழை, எளிய குடும்பத்தினர் 27 பேருக்கு வருவாய் துறையினர், கடந்த 2016ஆம் ஆண்டு இடம் வழங்கி பட்டா அளித்ததன் பேரில், அங்கு சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஊராட்சியில் தினந்தோறும் இரண்டு டிராக்டருக்கு மேல் சேகரிக்கப்படும் குப்பைகள் மழை காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக தரம் பிரிக்கப்படாமல் அப்பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. இதன் காரணமாக, சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி பொது மக்கள் போராட்டம் நடத்தியதால், குப்பைகளை கொட்டுவதற்கு மற்றொரு இடம் தேர்வு செய்யப்பட்டது.

People Protest against unsorted rubbish in mayiladuthurai
மழை நீருடன் குவிந்து கிடக்கும் குப்பைகள்

ஆனால், அங்கேயும் குப்பையை கொட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் குப்பையை ஊராட்சி நிர்வாகத்தினர் பொட்டல்வெளி திடலில் கொட்டுவதற்காக டிராக்டரில் எடுத்து வந்தனர். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, குப்பையுடன் வந்த டிராக்டரை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலை போல் குவிந்துள்ள குப்பைகள்

அப்போது குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும், தேர்வு செய்யப்பட்ட மாற்று இடத்தில் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

எதிர்ப்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஆணையர்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் தியாகராஜன், போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குப்பைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு தொடர்ந்து கொண்டுவரும் குப்பைகளை உடனுக்குடன் தரம்பிரித்து குப்பைகள் சேராத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அளித்த உறுதியின்பேரில் பேரில் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தரம்பிரிக்கப்படாமல் குவித்து வைக்கப்பட்ட குப்பைகள்

ஊராட்சி நிர்வாகம் சார்பில் உடையவர்கோவில்பத்து என்ற இடத்தில் குப்பை கிடங்கை மாற்றுவதற்குத் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள குடிமனை பட்டா வழங்க முடியாத 2.47 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தி, ஊராட்சி நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.