ETV Bharat / state

ஷேல் எரிவாயு கிணறு அமைக்கும் ஓஎன்ஜிசி நிறுவனம்: ஆட்சியரிடம் புகார்! - மயிலாடுதுறை ஆட்சியர்

மயிலாடுதுறையில் பழைய எண்ணெய்க் கிணற்றை சுத்தம் செய்வதாகக் கூறி, ஷேல் எரிவாயு கிணறு அமைக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் செயல்பாட்டைக் கண்டித்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த பேராசிரியர் த.ஜெயராமன்

author img

By

Published : Jun 26, 2021, 8:07 AM IST

மயிலாடுதுறை: குத்தாலம் அருகேவுள்ள அஞ்சார்வார்த்தலை கிராமத்தில் பழைய எண்ணெய் கிணற்றைச் சுத்தம் செய்வதாக பொதுமக்களை நம்ப வைத்து, மேற்கொள்ளும் ஷேல் எரிவாயு கிணறு அமைக்கும் பணியை ஓ.என்.ஜி.சி நிறுவனம் செய்து வருகிறது.

இதனைத் தடுத்து நிறுத்தக்கோரி மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் கோரிக்கை கடிதம் அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதியளித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பேராசிரியர் ஜெயராமன்:

"அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 15 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கோரிய ஓ.என்.ஜி.சி.யின் விண்ணப்பங்களை ஜூன் 21ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு நிராகரித்தது.

மீத்தேன், ஷேல் எரிவாயுத் திட்டங்களுக்கு அனுமதியில்லை என்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, அஞ்சார்த்தலை கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பழைய எண்ணெய்க் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் புதிய கிணறு அமைக்கும் வேலையை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்தப் பணிக்காக அங்கு ஏராளமான குழாய்கள் இறக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு கழிவுநீர் தேங்கும் குளமும் வெட்டப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, அங்கு நடைபெறுவது ஷேல் மீத்தேன் கிணறுகள் அமைக்கும் பணி என்பது தெளிவாகத் தெரிகிறது.

செய்தியாளர்களைச் சந்தித்த பேராசிரியர் த.ஜெயராமன்

தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு எதிரான செயல்:

மீத்தேன், ஷேல் எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதியில்லை என்ற தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ள கொள்கைக்கு இது எதிரானதாகும்.

தமிழ்நாடு அரசு எவ்வித எண்ணெய், எரிவாயுக் கிணறு அமைக்கவும் அனுமதிக்காது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், முன்னமே பெற்ற சுற்றுச்சூழல் அனுமதியைப் பயன்படுத்தி கூடுதல் ஆழத்திற்கு கிணறு அமைப்பது குற்றமாகும்.

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம்-2020 இயற்றப்படுவதற்கு முன்னரே கிணறுகள் அனுமதி பெற்று இருந்தாலும், அது இதுவரை செயல்படுத்தப்படாமல் இருந்தது.

இப்போது நடைமுறைப்படுத்த முயற்சித்தால், அது புதிய கிணறாகவே கருதப்படும். எனவே, தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி சட்டவிரோத எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.