கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இந்தியா முழுவதும் ‘மக்கள் ஊரடங்கு’ பின்பற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தார். இதன் காரணமாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் அனைவரும் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம் என்று கூறப்பட்டிருந்தது.
அந்த வகையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை இன்று மக்கள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பேருந்து நிலையம், கடைவீதிகள், பூக்கடைகள், சிறு வணிக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
ஒரு சிலரைத் தவிர பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். எந்த வாகனங்களும் இன்று இயக்கப்படவில்லை. இதேபோல் சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய பகுதிகளிலும் பொது மக்கள் ஊரடங்கை பின்பற்றி, தங்களது வீடுகளிலேயே முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கேப்டன் வீட்டில் எளிமையாக நடந்த கட்சி நிர்வாகி திருமணம்!