ETV Bharat / state

பாக்கெட் சாராயம் விற்ற கும்பலுக்கு பொதுமக்கள் அடி, உதை! - சாராயம் விற்ற கும்பல்

நாகை: ஊராட்சி பகுதிகளில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்துவந்த கும்பலை மக்கள் பிடித்து அடி கொடுத்தனர்.

people-beaten-the-gang-who-sells-illegal-pocket-liquor

author img

By

Published : Sep 8, 2020, 3:36 AM IST

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆனைமங்கலம் ஊராட்சி பகுதியில் காவல்துறையின் அனுமதியோடு சாராய விற்பனை படு ஜோராக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஆணைமங்கலம் சுடுகாடு அருகே மாந்தோப்பு பகுதியில் காரைக்கால் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்ட சாராய பாக்கெட்கள் விற்பனை நடந்து வந்தது. இதனையறிந்த அப்பகுதி மக்கள், சாராயம் விற்ற நபர்களை பிடித்து அடித்து, உதைத்தனர். மேலும் விற்பதற்காக வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளை அழித்தனர்.

இதனையறிந்த கீழ்வேளூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாராயம் விற்றவர்களை பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த சாராய வியாபாரிகள் கார்த்தி (29), கண்ணன் (24), நாவலன் (23), தன்ராஜ் (19) ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, சாராய பாக்கெட்களை கடத்தி வந்த மோட்டார் சைக்கிள், 110 லிட்டர் வெளிமாநில சாராய பாக்கெட்களை ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.