ETV Bharat / state

இரண்டு மாத கர்ப்பிணி மகளை கணவர் வீட்டார் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் தர்ணா!! - மயிலாடுதுறை‌ மாவட்ட செய்தி

தங்கள் இரண்டு மாத கர்ப்பிணி மகளை கணவர் வீட்டார் அடித்து கொலை செய்ததாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 9, 2023, 10:18 PM IST

இரண்டு மாத கர்ப்பிணி மகளை கணவர் வீட்டார் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் தர்ணா

மயிலாடுதுறை‌: தரங்கம்பாடி அருகே திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன நிலையில், பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மாமனார், மாமியார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அப்பெண்ணின் இன்று (ஜூன் 9) உறவினர்கள் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரங்கம்பாடி தாலுகா அன்னவாசல் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் காயத்திரி(26) என்பவருக்கும் செம்பனார்கோயில் அருகே உள்ள மேலப்பாதியை சேர்ந்த ராஜேஷ்(32) என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 18 பவுன் நகை, இருசக்கர வாகனம் (hero splendor+) உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களும் தங்களது மகளுக்காகக் கொடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மேலும், சீர்வரிசை பொருட்கள் கேட்டு காயத்திரியின் மாமனார் கலியபெருமாள், மாமியார் மரகதம் ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அதனையும் பெண் வீட்டார் வாங்கி கொடுத்ததாகவும் தெரியவருகிறது. இந்நிலையில் காயத்ரி தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும், காயத்திரி தற்போது மீண்டும் கர்ப்பமடைந்துள்ளதை தொடர்ந்து 2வது குழந்தை வேண்டாம் என்று கர்ப்பத்தை கலைக்கச்சொல்லி மாமனார், மாமியார் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Karur Temple Untouchability: கரூர் கோயிலில் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு; இழுத்துப் பூட்டிய அதிகாரிகள்..!

இந்நிலையில் நேற்றிரவு காயத்திரி வீட்டிலேயே தற்கொலை செய்துவிட்டதாகவும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளதாகவும் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை கேட்ட பெண்ணின் உறவினர்கள் அலறி அடித்து கொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது காயத்திரி இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தருமபுர ஆதீனத்தில் பட்டணப்பிரவேச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மகள் உயிரிழந்து 3 மணி நேரத்திற்கு பிறகு தாமதாமாக தகவல் தெரிவிக்கப்பட்டதும், மாமனார், மாமியார் வராதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், தங்கள் மகளை அடித்து கொலை செய்ததாக விட்டுள்ளனர் என்று கூறி காயத்திரியின் பெற்றோர் அன்பழகன் மற்றும் உறவினர்கள் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

போலீசார் காயத்திரியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமாகி மூன்று வருடம் ஆவதால் மயிலாடுதுறை ஆர்டிஓ யுரேகா இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், காயத்திரியின் உயிரிழப்பிற்கு காரணமான அவரது மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அதுவரை காயத்திரியின் உடலை வாங்க மாட்டோம் என மறுத்த அவரது பெற்றோர், உறவினர்கள் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை போலீசார் மற்றும் செம்பனார்கோவில் போலீசார் இது குறித்து உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டீக்கடையில்அதிகாரிகள் ஆய்வு.. சீல் வைப்பதை தடுத்த திமுக பிரமுகர்.. மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.