நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பெருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக எழுத்தராகப் பணியாற்றி வருபவர் ராமச்சந்திரன் (48). இவருக்கும், மருதங்குடியைச் சேர்ந்த அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் அலெக்சாண்டர் என்பவருக்கும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிருந்து முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் எழுத்தரின் வீடு புகுந்து மிரட்டிய ஊராட்சி தலைவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ராமச்சந்திரனை பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த எழுத்தரை அருகிலிருந்தவர்கள், சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள எழுத்தருக்கு தலைப்பகுதியில் பதினெட்டு தையல்கள் போடப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஊராட்சி மன்றத் தலைவர் அலெக்ஸ்சாண்டரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்ற எழுத்தருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புனேவில் வேதியியல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து