மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தொகுதியில் பாமக சார்பில் பழனிசாமி போட்டியிடுகிறார். கேசிங்கன், கடலங்குடி, திருச்சிற்றம்பலம், பூதங்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பழனிசாமி தீவிர பரப்புரை மேற்கொண்டார்.
கிராம மக்கள் வேட்பாளர் பழனிசாமிக்கு பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். மயிலாடுதுறை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பரப்புரையில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'திரும்பவும் வந்துறாத' - பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்ட அமமுக வேட்பாளர்