நாகை அடுத்துள்ள நாகூர் அரசு மருத்துவமனையில் கரோனா அவசர தேவைக்கு ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் இல்லாததை அறிந்த காதிஜா நாச்சியார் என்பவர் ஆக்சிஜன் கருவி ஒன்றை வழங்கினார்.
இந்த நிலையில் நன்கொடையாக வழங்கப்பட்ட ஆக்சிஜன் கருவியை நாகூர் அரசு மருத்துவனையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஷாநவாஸ், திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் ஆகியோர் மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர்.
அப்போது அவசர சிகிச்சைக்காக வரும் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கருவியைப் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்களிடம் சட்டப்பேரவை உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.