நாகை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே தீயணைப்பு துறைக்குச் சொந்தமான இடத்தில் பிரசித்தி பெற்ற சத்குரு சம்கார மூர்த்தி சித்தர் கோயில் அமைந்துள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் அங்கு வருவதால், அவர்களின் வசதிக்காக அண்மையில் கோயிலின் பின்புறம் மடப்பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் அக்கட்டடம் தீயணைப்புத் துறைக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளதால், அதனை இடிக்க காவல்துறையினர் ஜேசிபி வாகனத்தோடு வந்தனர்.
இதனையறிந்த அப்பகுதி மக்கள், பாஜகவினர் தலைமையில் கட்டடத்தை இடிக்க மறுப்பு தெரிவித்து நாகை – காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்படைந்த நிலையில், அங்கு விரைந்த கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை தவிர்க்கச் செய்தார். சாலை மறியலால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதையும் படிங்க: நெல் மூட்டைகளை இறக்க இடம் இல்லை - லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல்