மயிலாடுதுறை: திருக்கடையூரில் தொன்மை வாய்ந்த தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 60, 70, 75, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமம் செய்து அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு மிக்க கோயிலுக்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று (ஜூன் 9) வருகை புரிந்தார். அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் தலைமையில் மரியாதை செய்து வரவேற்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற எடப்பாடி பழனிச்சாமி கோ பூஜை, கஜ பூஜை செய்த பின்னர் ஸ்ரீ கள்ளவாரண விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி மற்றும் அபிராமி சன்னதிகளில் சிறப்பு தரிசனம் செய்தார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல்!