ETV Bharat / state

ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் தனியார் கல்வி நிறுவனம்!

மயிலாடுதுறை: பொதுத்தேர்வு எழுத தயாராக இருக்கும் பத்தாம் வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் எடுக்கும் தனியார் கல்வி நிறுவனம்.

ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் தனியார் கல்வி நிறுவனம்!
ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் தனியார் கல்வி நிறுவனம்!
author img

By

Published : Apr 30, 2020, 12:19 AM IST

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக வரும் மே 3ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாகை மாவட்டம், செம்பனார்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுத மொத்தம் 800 மாணவர்கள் தயாராக உள்ளனர். அவர்களை தயார் செய்யும் வகையில், ஆன்லைன் மூலம் அப்பள்ளி ஆசிரியர்கள், பாடம் நடத்தி வருகின்றனர். இதுதவிர தினந்தோறும் ஆசிரியர்கள் தாங்கள் நடத்தும் பாடத்தினை யூடியூப், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் தனியார் கல்வி நிறுவனம்!

மேலும், ஆன்ட்ராய்டு செல்போன் இல்லாத மாணவர்களுக்காக உள்ளூர் தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதேபோல், இந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் கல்லூரி மாணவர்களையும், தேர்வுக்கு தயார் படுத்தும் விதமாக பேராசிரியர்கள் பாடம் நடத்தி யூடியூப்பில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இவர்களின் இந்த முயற்சிக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் தனிமைபடுத்தப்பட்ட ஆறு பேர் வீட்டுக்கு அனுப்பி வைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.