நாகை மாவட்டாம், பப்ளிக் ஆபிஸ் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பொட்டலங்களை பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் ராணி என்பவர் வீட்டினுள் நுழைந்து அதிரடி சோதனை செய்தனர். அப்போது, பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான முதல் ரக கஞ்சாவை கண்டுபிடித்தனர் . காவல்துறையினர் வருவதையறிந்து கஞ்சா வியாபாரிகளான ராணி, ஆனந்த், மீனாட்சி ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
கஞ்சாவைம் கைப்பற்றிய காவல்துறையினர் தப்பியோடிய மூவரையும் வலைவீசித் தேடி வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், பேச்சியம்மாள் என்பவரது வீட்டை அடமானமாக வாங்கி, அந்த வீட்டில் ஆந்திராவிலிருந்து மதுரை வழியாக நாகைக்கு கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.