ETV Bharat / state

'பயிர் காப்பீடுத் தொகை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க மத்திய அரசுக்கு அறிக்கை'

author img

By

Published : Sep 26, 2019, 3:48 PM IST

நாகப்பட்டினம்: பயிர் காப்பீடுத் தொகை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

பயிர் காப்பீடுத் தொகை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க திருத்தங்கள் தேவை என்பதால், விவசாயிகளின் கருத்துகள் குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் ஓஎஸ்.மணியன் தெரிவித்தார்.

நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பயிர் காப்பீடுத் தொகை செலுத்திய 81 ஆயிரத்து 308 விவசாயிகளில், 76 ஆயிரத்து 984 விவசாயிகளுக்கு இதுவரை 184 கோடியே 2 லட்சம் ரூபாய் காப்பீடுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

மேலும் 27 ஆயிரத்து 200 விவசாயிகளுக்கு விரைவில் பயிர் காப்பீடுக்கான இழப்பீடுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், காப்பீடு தொகை குறித்து விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை என்று உறுதியளித்தார்.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் விடுபட்ட தூர்வாரும் பணிகள், அடுத்தாண்டு முடிக்கப்படும் என்றும், டெல்டா பகுதிகளில் பெய்த மழை கைகொடுத்துள்ளதால் களை செடிகள் குறைந்து நேரடி விவசாயம் செய்துள்ள விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என ஓஎஸ்.மணியன் கூறினார்.

இதையும் படிங்க:
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான நிலுவையிலுள்ள பாலியல் குற்ற வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு

Intro:பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப தமிழக அரசு முடிவு ; அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி.
Body:பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப தமிழக அரசு முடிவு ; அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி.

பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க திருத்தங்கள் தேவை என்பதால், விவசாயிகளின் கருத்துக்கள் குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் ஓஎஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்
பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் பிரிமியம் தொகை செலுத்திய 81 ஆயிரத்து 308 விவசாயிகளில் 76 ஆயிரத்து 984 விவசாயிகளுக்கு இதுவரை 184 கோடியே 2 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மீதமுள்ள 27 ஆயிரத்து 200 விவசாயிகளுக்கு விரைவில் பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு இன்சூரன்ஸ் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இன்சூரன்ஸ் தொகை குறித்து விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை என்றும் உறுதியளித்தார். குடி மராமத்து திட்டத்தின்கீழ் விடுபட்ட தூர்வாரும் பணிகள் அடுத்தாண்டு முடிக்கப்படும் என்றும், டெல்டா பகுதிகளில் மழை கை கொடுத்துள்ளதால் களை செடிகள் குறைந்து நேரடி விவசாயம் செய்துள்ள விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என அமைச்சர் ஓஎஸ்.மணியன் கூறினார்.

பேட்டி ; ஓஎஸ்.மணியன், கைத்தரித்துறை அமைச்சர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.