ETV Bharat / sports

முருகப்பா ஹாக்கி போட்டி; அரை இறுதியில் மோதப்போகும் அணிகள் எவை? - MURUGAPPA GOLD CUP HOCKEY

95வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியின் அரை இறுதிப் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இதில், ரயில்வே அணி - ஒடிசா அணியுடனும், ஐஓசி அணி - இந்திய ராணுவ அணியுடனும் மோதுகின்றன.

ஹாக்கி வீரர்கள்
ஹாக்கி வீரர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 27, 2024, 11:07 PM IST

சென்னை : 95வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியில் கடைசி லீக் போட்டிகள் நேற்று (செப் 26) நடைபெற்றது. முதல் போட்டியில் இந்திய ஆயில் கார்பரேஷன் அணியும், போபால் அணியும் இரண்டாவது போட்டியில் ரயில்வே அணியும், தமிழ்நாடு ஹாக்கி அணியும் மோதின.

முதலில் நடைபெற்ற போட்டியில் ஐஓசி அணியும் போபால் அணியும் மோதின. இதில் தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். மேலும், ஐஓசி அணியின் ரோஷன் 8 நிமிடத்திலும், அஃபான் யுசப் 10 நிமிடத்திலும் கோல் அடித்து தங்கள் அணியை 2-0 என்ற கணக்கில் முன்னிலைப்படுத்தினர்.

பின்னர் சுதாரித்த போபால் அணி வீரர்கள் கோல் அடிக்க 3-2 என்ற கணக்கில் போபால் அணி முன்னிலை பெற்றது. பரபரப்பாக சென்ற ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஐஓசி அணி வீரர் தல்விந்தர் சிங் ஒரு கோல் அடித்து ஆட்டத்தைதை 3-3 என்ற கணக்கில் சமன் செய்தார்.

ஆட்டம் சமனில் சென்றுக்கொண்டு இருக்கும் போது போபால் அணியின் பவன் குமார் மீண்டும் 35வது நிமிடத்தில் கோல் அடிக்க ஆட்டம் 4-3 என்ற கணக்கில் ஆட்டம் போபால் அணி பக்கம் சென்றது. அதனைத்தொடர்த்து 43வது நிமிடத்தில் போபால் அணி வீரர் பிரமோத் கோல் அடிக்க ஆட்டம் 5-3 என்ற கணக்கில் போபால் அணி முன்னிலை பெற்றது.

வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் ஆடிக்கொண்டு இருந்த போபால் அணியை தடுக்கும் வகையில் ஐஓசி அணியின் சுமித் குமார் 45வது நிமிடத்திலும், மண்ப்ரீத் 47வது நிமிடத்திலும் கோல் அடித்து ஆட்டத்தை 5-5 என்ற கணக்கில் சமன் செய்தனர். ஆட்டம் முடிவில் 5-5 என்ற கணக்கில் சமன் ஆனது. ஐஓசி அணி தனது கடைசி லீக் போட்டியை மூன்று வெற்றிகள் மற்றும் ஒரு டிராவுடன் முடித்து 10 புள்ளிகளுடன் B பிரிவில் முதல் இடம் பிடித்தது.

இதையும் படிங்க : முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி; தமிழ்நாடு அணிக்கு ஆட்டம் காட்டிய ஆர்மி அணி அபார வெற்றி!

பின்னர் இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் ரயில்வே அணியை, தமிழ்நாடு அணி சந்தித்து. நடப்பு சாம்பியன் ரயில்வே அணியின் ஆதிக்கம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது. பர்தீப் சிங் 7 மற்றும் 15வது நிமிடத்திலும், ஆதித்யா சிங் 10வது நிமிடத்திலும், சிவம் ஆனந்த் 39வது நிமிடத்திலும், மற்றும் ஜோகிந்தர் சிங் 43வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

இதில், ரயில்வே அணி 5-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தில் கடைசி வரை தமிழ்நாடு அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் ரயில்வே அணி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ரயில்வே அணி A பிரிவில் 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தமிழ்நாடு அணி 3 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் லீக் சுற்றுகளை முடித்தது. நாளை(செப்.28) அரையிறுதி போட்டியில் ரயில்வே அணி - ஒடிசா அணியுடனும், 2வது போட்டியில் ஐஓசி அணி - இந்திய ராணுவ அணியும் மோதுகிறது. இதில் வெற்றிபெறும் அணி நாளை மறுநாள்( செப் 29) நடைபெறும் இறுதி போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.