ETV Bharat / state

கரோனா எதிரொலி - வெறிச்சோடிய நாகை பத்திரப்பதிவு அலுவலகம் - bond registration has Start nagai

நாகப்பட்டினம்: மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ஓருவர்கூட வரவில்லை

author img

By

Published : Apr 20, 2020, 2:54 PM IST

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவை மே 3 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 20ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு சில கட்டுப்பாடுகளுடன் தளர்வுசெய்யப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தன.

அதன்படி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அந்த அடிப்படையில் நாகப்பட்டினத்தில் உள்ள பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்கள் இன்று செயல்படத் தொடங்கியன.

பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ஓருவர்கூட வரவில்லை

மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரும் நபர்களுக்காக அலுவலக வாசலில் கை சுத்திகரிப்பான், வாளியில் தண்ணீர் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு குறைந்த அளவு ஊழியர்கள் முகக் கவசம், கையுறை அணிந்தவாறு பணிக்கு வந்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 43 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், அச்சமடைந்துள்ள மக்கள் பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்திற்கு இன்று ஒருவர்கூட வரவில்லை. அரசு அறிவித்துள்ள தளர்வில் வெளியே செல்லலாமா, வேண்டாமா? என பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: நெல்லையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வெறிச்சோடிய மக்கள் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.