ETV Bharat / state

வெறிச்சோடிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பரப்புரை பொதுக்கூட்டம்! - dmk alliances

நாகை: நாகப்பட்டினத்தில் நடந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பரப்புரை பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

திமுக கூட்டணி பொதுக்கூட்டம்
author img

By

Published : Mar 27, 2019, 10:07 AM IST

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் ஒரு பகுதியாக,நாகப்பட்டினம் நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து திராவிட கழகம் சார்பில் நாகையில் நேற்று பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசு உள்ளிட்ட தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம், மாலை 4 மணியளவில் நடைபெறுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் சுமார் 2 மணி நேரம் காலதாமதமாகவேகூட்டம் தொடங்கியது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பல கட்சிகள் இருந்தும், இக்கூட்டத்தில் அவர்கள் யாரும் பெருமளவில் பங்கேற்கவில்லை.திராவிட கழகத்தொண்டர்களே மேடையின் முன்புறம் அமர்ந்திருந்தனர்.மதசார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி இத்தொகுதியில் வெற்றி பெறும் என கூறப்படும் நிலையில், கூட்டணி கட்சித்தொண்டர்கள் பெருமளவில் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் தொண்டர்கள் அமருவதற்காக மேடையின் எதிரே போடப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட நாற்காலிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

பாஜக கூட்டங்களில் தொண்டர்கள் இல்லாமல் காலி சேர்களை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, நெட்டிசன்கள் கிண்டல் அடிப்பது வழக்கம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிப் பெறும் எனும் எதிர்பார்ப்புகள் நிலவிவரும் இந்த சூழலில், அக்கூட்டணி நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள் இல்லாமல் சேர்கள் காலியாக கிடந்ததை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Intro:வெறிச்சோடிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம்.

Body:வெறிச்சோடிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம்.

நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து திராவிட கழகம் சார்பில் நாகையில் இன்று பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசு உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கூட்டம் மாலை 4 மணி அளவில் நடைபெறுவதாக அறிவித்திருந்தனர் ,ஆனால் சுமார் 2 மணி நேரம் காலதாமதமாக கூட்டம் துவங்கியது, அப்போது தொண்டர்கள் அமர்வதற்காக மேடையின் எதிரே 500க்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட்டிருந்தன, இருப்பினும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பல கட்சிகள் இருந்தும் , இக்கூட்டத்தில் அவர்கள் யாரும் பெருமளவில் பங்கேற்க வில்லை, திராவிட கழக தொண்டர்களே மேடையின் முன்புறம் அமர்ந்திருந்தனர், மதசார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி இத்தொகுதியில் வெற்றி பெறும் என கூறப்படும் நிலையில், கூட்டணி கட்சி தொண்டர்கள் பெருமளவில் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் மேடையின் எதிரே தொண்டர்கள் அமர போடப்பட்டிருந்த நாற்காலிகளிகள் வெறிச்சோடி காணப்பட்டதால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.