ETV Bharat / state

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு - சீர்காழி அருகே என்.ஐ.ஏ. சோதனை - coimbatore car cylinder blast

சென்னை, கோவையைத் தொடர்ந்து, சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

என்.ஐ.ஏ. சோதனை
என்.ஐ.ஏ. சோதனை
author img

By

Published : Nov 10, 2022, 10:28 AM IST

மயிலாடுதுறை: கோவையில் கடந்த மாதம் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் முதற்கட்டமாக 6 பேரை உபா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மயிலாதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் பகுதியில் உள்ள அல் பாஷித் என்பவர் வீட்டில் அதிகாலை முதலே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

அல் பாஷித்தின் வீடு பூட்டப்பட்டு சோதனை வளையத்திற்குள் கொண்டு வரபட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.