கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளிலே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், நாகப்பட்டினம் அருகே உள்ள தரங்கம்பாடி பகுதி முழுவதும் மக்கள் அதிகம் கூடியுள்ள இடங்களில் லைசால் கலந்த கிருமிநாசினி அடித்து சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், திருக்கடையூர், ஆக்கூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சுகாதார நிலையங்களில் போதிய முகக் கவசங்கள், லைசால் உள்ளனவா என்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் செவிலியர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க:சமூக இடைவெளியுடன் செயல்படுகிறதா காய்கறி சந்தை: அமைச்சர் ஆய்வு