ETV Bharat / state

அடிக்கடி ஏற்படும் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு: ரூ.2.75 கோடி செலவில் புதிய குழாய்கள் அமைப்பு! - ரூ.2.75 கோடி செலவில் புதிய குழாய்கள் அமைப்பு

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை நகராட்சியில் அடிக்கடி ஏற்படும் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு பிரச்னையை நிரந்தரமாக சரிசெய்ய 2 கோடிய 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நீரேற்று குழாய்கள் அமைக்கும் பணியை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

புதிய குழாய் அமைக்கும் பணி தொடக்கம்
புதிய குழாய் அமைக்கும் பணி தொடக்கம்
author img

By

Published : Dec 31, 2020, 5:01 PM IST

மயிலாடுதுறை நகராட்சி பகுதியிலுள்ள 36 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டுவருகிறது. இத்திட்டத்தில் கடந்த சில வருடங்களாக பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக சாலைகளில் திடீர் பள்ளங்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தி வந்தது.

இதனால், போக்குவரத்து தடைபடுவதுடன், கழிவுநீர் வெளியேற்றம், துர்நாற்றம் ஆகிய பிரச்னைகளால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுவந்தது. இந்நிலையில், தரங்கம்பாடி சாலையில் கடந்த மாதம் மீண்டும் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலை உள்வாங்கி, கழிவு நீரேற்றம் தடைபட்டது.

ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் புதிய குழாய் அமைப்பு:

இதையடுத்து, சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடத்தை நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் இம்மாத தொடக்கத்தில் ஆய்வு செய்து, இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் பாதிப்பை நிரந்தரமாக சரிசெய்யும் விதமாக 2.19 கி.மீட்டர் தொலைவுக்கு புதிய நீரேற்று குழாய்கள் அமைக்க 2 கோடிய 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

புதிய குழாய் அமைக்கும் பணி தொடக்கம்

இந்நிலையில், அத்திட்டத்திற்கான பூமிபூஜை இன்று (டிச.31) நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று, குழாய் பதிக்கும் பணியை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் விஜிகே.செந்தில்நாதன், நகராட்சி ஆணையர் சுப்பையா, நகராட்சி பொறியாளர் குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் பாதாள சாக்கடைக் குழாய் உடைப்பு: பிரச்னை சரியாகி விடுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.