ETV Bharat / state

தேசியக் கொடியை குப்பைத் தொட்டியில் நட்டுவைத்த இருவர் மீது வழக்குப்பதிவு

நாகை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பேரணியில் தேசியக் கொடியை குப்பைத் தொட்டியில் நட்டுவைத்து அவமதித்ததாக இருவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

national flag fir
national flag fir
author img

By

Published : Feb 4, 2020, 9:11 AM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்டம், வவ்வாலடி கிராமத்திலிருந்து கேதாரிமங்கலம் வரை இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக நேற்று முன்தினம் கண்டன பேரணி நடைபெற்றது.

பேரணியில் கலந்து கொண்ட சிலர் தேசியக் கொடியை பேரணி செல்லும் சாலையில் அமைந்திருந்த குப்பை தொட்டி அருகே உள்ள மின்கம்பத்தில் நட்டுவைத்துச் சென்றனர். தேசியக் கொடியை அவமதித்துள்ளதாகக் கூறி எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவந்தது.

சிஏஏ எதிர்ப்புப் பேரணி

இதனை அறிந்த காவல் துறையினர் ஏனங்குடி பகுதியில் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சித்திக், முஜிபூர் ரகுமான் ஆகிய இருவர் குப்பைத் தொட்டியில் தேசியக் கொடியை நட்டுவைத்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவர் மீதும் தேசியக் கொடியை அவமதித்ததாக திட்டச்சேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவன் வெறிச்செயல்!

Intro:நாகை அருகே குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்புப் பேரணியில் தேசியக் கொடியை குப்பைத் தொட்டியில் நட்டு வைத்து அவமதித்ததாக இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.Body:நாகை அருகே குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்புப் பேரணியில் தேசியக் கொடியை குப்பைத் தொட்டியில் நட்டு வைத்து அவமதித்ததாக இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்டம், வவ்வாலடி கிராமத்திலிருந்து கேதாரிமங்கலம் வரை இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக நேற்று முன்தினம் கண்டன பேரணி நடைபெற்றது.

பேரணியில் கலந்து கொண்ட சிலர் தேசியக்கொடியை பேரணி செல்லும் சாலையில் அமைந்திருந்த குப்பை தொட்டி அருகே உள்ள மின்கம்பத்தில் நட்டுவைத்து சென்றனர். தேசிய கொடியை அவமதித்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனை அறிந்த காவல்துறையினர் ஏனங்குடி பகுதியில் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சித்திக் மற்றும் முஜிபூர் ரகுமான் ஆகிய இருவர் குப்பைத் தொட்டியில் தேசிய கொடியை நட்டு வைத்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவர் மீதும் தேசிய கொடியை அவமதித்ததாக திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.