Nammalvar memorial Day: மயிலாடுதுறை மாவட்டம் நல்லாவூர் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரின் 8-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இந்த கருத்தரங்கம் ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் மற்றும் ஐசிஐசிஐ பவுண்டேஷன் சார்பில் நடைபெற்றது.
தமிழக இயற்கை உழவர் இயக்க தலைவர் பந்தநல்லூர் அசோகன் தலைமையில் விவசாயிகள் நம்மாழ்வார் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அவர்கள் பாரம்பரிய இயற்கை விவசாயத்தை மேற்கொள்வோம் வரும் தலைமுறையை நோயில்லாத சமுதாயமாக மாற்றுவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், பாரம்பரிய நெல் பாதுகாவலர் நெல் ஜெயராமனால் மீட்டெடுக்கப்பட்ட 174 வகையான பாரம்பரிய நெல்மணிகள் கண்காட்சி நடைபெற்றது.
இதையும் படிங்க: நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தையைப் பிடிக்க மேலும் ஒரு கூண்டு