நாகப்பட்டினம்: நாகூரில் உள்ள உலக புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவின் 466ஆவது கந்தூரி விழா கடந்த டிச.24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் ஜன.1ஆம் தேதி பீர் அமர வைத்தல், ஜன.2ஆம் தேதி சந்தனகூடு ஊர்வலம், ஜன.3ஆம் தேதி ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி, ஜன.4ஆம தேதி பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
அந்த வகையில் மொத்தமாக 14 நாட்கள் நடைபெற்ற திருவிழாவின் கடைசி நாளான இன்று (ஜன.7), தர்கா பரம்பரை கலிபா துவா ஓதிய பிறகு 5 மினாராவிலும் ஒரே நேரத்தில் கொடி இறக்கப்பட்டது. வண்ணமயமான வான வேடிக்கைகள், அதிர்வேட்டுகள் முழங்க கொடிகள் இறக்கப்பட்ட இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: Video - நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!