நாகை மாவட்டம் மயிலாடுதுறை பூக்கடைத்தெருவைச் சேர்ந்த கார்த்தி வயது (28), என்பவரும் குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (28) என்பவரும், மயிலாடுதுறை - சித்தர்காடு பகுதியில் எதிரெதிரே இருசக்கர வாகனங்களில் வந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கீழே விழுந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த கார்த்தி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதையடுத்து உயிரிழந்த ரமேஷ், கார்த்தி ஆகியோரின் உடலை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம் சாலையின் இரண்டு பக்கமும் விதிமுறைகளை கடைபிடிக்காமல் லாரிகளை நிறுத்துவதால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விதிமுறைகளை மீறி லாரிகளை நிறுத்தும் உரிமையாளர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் அபராத தொகை விதித்தாலும் ஒருசிலர் லாரிகளை தொடர்ந்து நிறுத்துவதாக போக்குவரத்து காவல்துறையினர் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: 'ஜோக்கர்' பட பாணியில் கழிப்பறை முறைகேடு - பொதுமக்கள் குற்றச்சாட்டு