ETV Bharat / state

கெத்து காட்டும் காவல்துறைக் கண்காணிப்பாளர்

நாகப்பட்டினம்: பொறுப்பேற்ற 40 நாட்களில் 150 பேரை நாகப்பட்டினம் காவல் துறை கண்காணிப்பாளர் கைது செய்துள்ளார்.

காவல்துறைக் கண்காணிப்பாளர்
author img

By

Published : Aug 10, 2019, 6:30 PM IST

Updated : Aug 10, 2019, 8:01 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் காரைக்காலுக்கு அருகிலிருப்பதால் காலம் காலமாக மதுக் கடத்தல் தொடர் கதையாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 40 நாட்களுக்கு முன்பு ராஜசேகரன் காவல் துறை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் பொறுப்பேற்ற நாள்முதலே நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல அதிரடி மாற்றங்களைச் செய்துவருகிறார்.

வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க 24 மணிநேரமும் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட ’விட்டர்’ ரோந்து காவலர்களை அறிமுகம் செய்துவைத்துள்ளார். மேலும், மது கடத்தலைத் தடுக்கும் முயற்சியில் இதுவரை 150 பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜசேகரன் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறார். கடந்த ஒன்றரை மாதங்களாக மாவட்டம் முழுவதும் அமைதி நிலவி வருகிறது’ என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கெத்துக்காட்டும் காவல்துறைக் கண்காணிப்பாளர்

Intro:பொறுப்பேற்ற 40 நாட்களில், 150 பேர் கைது - நாகை எஸ்.பி அதிரடி.Body:பொறுப்பேற்ற 40 நாட்களில், 150 பேர் கைது : நாகை எஸ்.பி அதிரடி.

நாகப்பட்டினம் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்கால் மாவட்டம் இங்கிருந்து நாள், நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மது கடத்தல் என்பது தொடர்கதையாக , காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த மாதம் புதியதாக ராஜசேகரன் பொறுப்பேற்றார். அன்று முதல் அவர் மாவட்டத்தில் குற்ற நிகழ்வுகளை குறைக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் , வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்கு 24 மணிநேரமும் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட , விட்டர் என்ற ரோந்து காவலர்களே அறிமுகம் செய்து வைத்தார், அதேபோன்று குற்ற நிகழ்வுகளை குறைப்பதற்கு பல ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் குறிப்பாக மது கடத்தல் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தான் பொறுப்பேற்ற 40 நாட்களில் மது கடத்தல் தொடர்பாக 150 பேரை இதுவரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளார். மேலும், மது கடத்தலில் ஈடுபடுபவர்கள் வாகனங்களை அதிவேகமாக ஓட்டி பல விபத்துக்களை ஏற்படுத்தி வந்த நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக அவை குறைந்துள்ளதாகவும், இதனால் நிம்மதி அடைந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.Conclusion:
Last Updated : Aug 10, 2019, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.