நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பகல் பொழுதில் வெயில் வாட்டி வந்தது. தற்போது வெப்பச்சலனம் காரணமாக இன்று காலை முதல் நாகை, வேளாங்கண்ணி, திருக்குவளை, வலிவலம், கொளப்பாடு, ஆதமங்கலம், விடங்கலூர், சித்தாய்மூர், எட்டுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் காலை முதல் கனமழை பெய்துவருகிறது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவிவருகிறது. இருப்பினும் தற்போது சம்பா அறுவடைக்கு தயாராக உள்ளதால், இந்தத் திடீர் மழை அறுவடையைப் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ்ஸுக்கு அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்