நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டபீர் தெருவைச் சேர்ந்த சேகர், இவருக்குச் சொந்தமான காய்கறி கடை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான வண்டிக்காரத் தெருவில் உள்ளது. நேற்று இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 60 கிலோ வெங்காயம், காய்கறிகள், ரூ.12 ஆயிரம் ரொக்கப்பணம், மூன்று செல்போன்கள் உள்ளிட்டவற்றை திருடியுள்ளனர்.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் சேகர் அளித்த புகாரின் அடிப்படையில், மயிலாடுதுறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனிடையே, மயிலாடுதுறையில் வெங்காயம் ரூ. 150 வரை விற்கப்படும் நிலையில், இந்த கொள்ளை சம்பவம் இப்பகுதியில் வர்த்தகர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க: 'கணினி வாங்கினால்,1.5 கிலோ வெங்காயம் இலவசம்' - விளம்பரப் பதாகையால் பொதுமக்கள் வியப்பு!