நாகப்பட்டினம் மாவட்டம் காரைக்காலில் கடந்த 31 நாள்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனை மதிக்காமல் தேவையின்றி வெளியே சுற்றி வருகிறவர்களை அறிந்த மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, ”வெளியிடங்களில் எச்சில் துப்புதல், முகக்கவசமின்றி வெளியே வருதல், தகுந்த இடைவெளி உட்பட பல்வேறு விதிமுறைகளை பின்பற்றாமல் வெளியே வருபவர்கள் மீது நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று காரைக்கால் நகராட்சி சார்பாக 8 குழுக்கள் அமைக்கப்பட்டு மக்கள் கூடும் இடங்களில் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
காரைக்காலில் மட்டும் ஒரு மணி நேரத்தில் 500 க்கும் மேற்பட்டவர்கள் மீது விதிமுறை பின்பற்றவில்லை என்று அபராதம் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கும் 6 வகை பழங்கள் அடங்கிய தொகுப்பு விற்பனைத் தொடக்கம்!