ETV Bharat / state

'மீன்பிடித் தடைக்கால மானியத் தொகை வழங்க வேண்டும்' - மீனவர்கள் கோரிக்கை - 60 நாட்கள் தடை

நாகை: தடைக்காலத்தில் மீன் பிடித் தொழில் வருவாய் போதியளவு இல்லாததால், தமிழக அரசு வங்கி கடன் மற்றும் மானியத் தொகை வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம்
author img

By

Published : May 7, 2019, 5:11 PM IST

கிழக்கு கடற்கரையில் மீன்களின் இனப் பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 13 வரையில் 60 நாட்கள் மீன் பிடித் தடைக் காலமாக அரசு அறிவித்துள்ளது. இந்த காலங்களில் 6 குதிரைத்திறனுக்கு மேல் உள்ள மோட்டார் இன்ஜின்கள் பொருத்திய படகுகள் மற்றும் இழுவை வலைகளை பயன்படுத்த மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சூடிபிடித்துள்ள பழுது பார்க்கும் பணி:

நாகை மாவட்டத்தை பொறுத்தவரையில் கொள்ளிடம் முதல் கோடியக்கரை வரையிலான 60க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. தற்போது தடை காலத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபடாமல் படகுளை பழுது நீக்கும் பணியிலும் பராமரிப்பு பணிகளிலும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நாகை தோணித்துறை பகுதியில் இன்ஜின் பழுது நீக்கம் படகு சீரமைத்தல், வலைகள் மற்றும் மீன்பிடி சாதனைங்களை பழுது நீக்கம் செய்தல், படகுகளில் கடைசல் மற்றும் தச்சு வேலைபாடுகள், கிரீஸ் பூசூதல், வர்ணம் அடித்தல் போன்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்பணியில் நூற்றக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்களின் கோரிக்கை:

இது குறித்து மீனவர் தரப்பிலிருந்து, ஒரு படகினை பழுது நீக்கி மராமத்து பணிகள் மேற்கொள்ள குறைந்தது பத்து நாட்களாகும். படகு ஒன்றிற்கு 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை செலவாவதாக கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மீன் பிடித் தொழில் வருவாய் போதியளவு இல்லை எனவும், சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட கஜா புயலில் பாதிப்பினாலும் கடன் வாங்கி பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

மீன்பிடி தடைக்காலம்

எனவே, புதுச்சேரி அரசு மீனவர்களுக்கு மானியம் வழங்குவது போன்று தமிழக அரசும் வங்கி கடன் மற்றும் மானிய தொகை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்று தற்போது மீன் பிடி தடை காலத்தை ஏப்ரல், மே மாதத்திலிருந்து இயற்கை சீற்றம் அதிகம் ஏற்படக்கூடிய நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாற்றித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Intro:60 நாட்கள் மீன் பிடித்தடைக்காலம் தற்சமயம் அமலில் உள்ள நிலையில் படகு பழுது மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளில் மீன் பிடித் தொழில் வருவாய் போதிய அளவு இல்லாத காரணத்தினால் கடன் வாங்கி பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் , தமிழக அரசு வங்கி கடன் மற்றும் மானிய தொகை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை.

Body:60 நாட்கள் மீன் பிடித்தடைக்காலம் தற்சமயம் அமலில் உள்ள நிலையில் படகு பழுது மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளில் மீன் பிடித் தொழில் வருவாய் போதிய அளவு இல்லாத காரணத்தினால் கடன் வாங்கி பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் , தமிழக அரசு வங்கி கடன் மற்றும் மானிய தொகை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுக் குறித்த ஒரு செய்தி தொகுப்பு...

       கிழக்கு கடற்கரையில் மீன்களின் இனப் பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜீன் 13 நள்ளிரவு வரையிலான 60 நாட்களை மீன் பிடித் தடைக் காலமாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. மாநில அரசும் இதற்காக 1983ம் ஆண்டு கிழக்கு கடற்கரையில் தமிழ் நாடு கடல் மீன் பிடி ஒழுங்கு முறை சட்டம் கொண்டு வரப்பட்டு சென்னை திருவள்ளுவர் மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடலோரப் பகுதிகளில்; மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த காலங்களில் 6 குதிரைத்திறனுக்கு மேல் உள்ள மோட்டார் இன்ஜின்கள் பொறுத்திய படகுகள் மற்றும் இழுவை வலைகளை பயன்படுத்தி மீன் பிடித் தொழில் செய்யும் விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

      மீன் பிடித் தடைக்காலம் தற்சமயம் கிழக்கு கடற்கரையில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 6 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் இழுவைப்படகுகள் மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தை பொறுத்தவரையில் கொள்ளிடம் முதல் கோடியக்கரை வரையிலான 60க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பயன்பாட்டில் உள்ள 2ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக கரையேற்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

     படகுளை பழுது நீக்கும் பணியிலும் பராமரிப்பு பணிகளிலும் தற்சமயம் ஈடுபட்டுள்ளனர். நாகை தோணித்துறை பகுதியில் கடுவையாற்றில் இருந்து படகுகள் பாதுகாப்பாக கரையேற்றப்பட்டு இன்ஜின் பழுது நீக்கம் படகு சீரைமத்தல வலைகள் மற்றும் மீன்பிடி சாதனைங்களை பழது நீக்கம் செய்தல் படகுகளில் கடைசல் மற்றும் தச்சு வேலைபாடுகள் கீரிஸ்; பூசூதல் வர்ணம் அடித்தல் போன்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. இப்பணியில் நூற்றக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

     ஒரு படகுகனை பழுது நீக்கி மராமத்து பணிகள் மேற் கொள்ள ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்கள் ஆகும் நிலையில் படகு ஒன்றிற்க்கு 3இலட்சம் ரூபாயில் இருந்து 5இலட்சம் ரூபாய் வரை செலவாவதாக கூறும் மீனவர்கள் கடந்த சில ஆண்டுகளாக மீன் பிடித் தொழில் வருவாய் போதிய அளவு இல்லாத காரணத்தினாலும் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட கஜா புயலில் பாதிப்பினாலும் கடன் வாங்கி பணிகளை மேற் கொண்டு வருவதாகவும், புதுச்சேரி அரசு மீனவர்களுக்கு மானியம் வழங்குவது போன்று தமிழக அரசும் வங்கி கடன் மற்றும் மானிய தொகை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது போன்று தற்போது மீன் பிடி தடை காலம் நடைமுறைப்படுத்தப்படும் ஏப்ரல், மே மாதத்திலிருந்து இயற்கை சீற்றம் ஏற்படக்கூடிய நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாற்றித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.