கடந்த சில தினங்களாக நாகையில் கனமழை பெய்து வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் நாகை, கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த முகிந்தன், முருகவேல், வேலாயுதம் உள்ளிட்ட மூன்று பேர் நேற்று மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பி கொண்டிருக்கும்போது, விசைப்படகு கடல் சீற்றம் காரணமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் இருந்த மூவரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் படகில் வந்த சாமந்தான்பேட்டை கிராம மீனவர்கள் கடலில் தத்தளித்த வேலாயுதம், முகிந்தன் ஆகிய இருவரையும் பத்திரமாக மீட்டு, நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கடலில் மாயமான முருகவேலை சகமீனவர்களும், கடலோர காவல் துறையினரும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க: "எங்கள் சைக்கிளை ரிப்பேர் செய்து தரலை" போலீசில் புகார் 10 வயது சிறுவன் புகார்..!