ETV Bharat / state

வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறையில் நாகை தலைமைத் தேர்தல் அலுவலர் ஆய்வு - COUNTING HALL

நாகை: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையினை, நாகை மாவட்ட தலைமைத் தேர்தல் அலுவலர் சுரேஷ்குமார் இன்று ஆய்வு செய்தார்.

பாதுகாப்பு அறையில் ஆட்சியர் ஆய்வு
author img

By

Published : Apr 21, 2019, 10:19 PM IST

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் மயிலாடுதுறை மன்னன்பந்தல் தனியார் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், திருவிடைமருதூர், பாபநாசம், கும்பகோணம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்கு எந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று மதியம் நாகை மாவட்ட தலைமைத் தேர்தல் அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், அலுவலர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதற்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு அறை வாயிலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும், அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு அதிரடிப்படையினரும், மூன்றாவதாக மாவட்ட ஆயுதப்படை வீரர்களும், கட்டடங்களை சுற்றி தாலுகா காவல் நிலைய காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாவது நாளாக தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்குச் சென்று அங்கிருந்து பார்வையாளர்கள் பதிவேட்டில் அலுவலர்கள் கையொப்பமிட்டு பூட்டப்பட்ட அறைகளையும் வைக்கப்பட்ட சீல் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர். கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

பின்னர், மாவட்டத் தலைமைத் தேர்தல் அலுவலர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மயிலாடுதுறை மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் நான்கு அடுக்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடன் இவற்றை இன்று ஆய்வு செய்தோம். அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளே வந்து பார்வையிட வசதியாக அவர்களுக்கு தனியாக பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் கட்டுப்பாட்டு அறை வரை செல்லலாம். சீல் வைக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம் .சீல் வைக்கப்பட்டுள்ளதற்கு பக்கத்தில் செல்லக் கூடாது. அதே போன்று கட்டுப்பாட்டு அறையில் உள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்பது முகவர்கள் காணலாம்' என்றார்.

ஆட்சியர் ஆய்வு

Intro:மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மைய, காப்பு அறையில் மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆய்வு:-

Body:மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் மயிலாடுதுறை மன்னன்பந்தல் தனியார் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், திருவிடைமருதூர், பாபநாசம், கும்பகோணம் ஆகிய சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்கு எந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டு வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் கடந்த 19 ஆம் தேதி அன்று மதியம் தேர்தல் நடத்தும் அலுவலரும் நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதற்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு அறை வாயிலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், அதற்கு அடுத்தபடியாக தமிழக அதிரடிப்படையினரும், மூன்றாவதாக மாவட்ட ஆயுதப்படை வீரர்களும், கட்டிடங்களை சுற்றி தாலுகா காவல் நிலைய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் என 20க்கும் மேற்பட்டோர் அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்குச் சென்று அங்கிருந்து பார்வையாளர்கள் பதிவேட்டில் அதிகாரிகள் கையப்பமிட்டு பூட்டப்பட்ட அறைகளையும் வைக்கப்பட்ட சீல் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர். கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். பின்னர், மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் எண் 28 மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகளும் 4 அடுக்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடன் இவற்றை இன்று ஆய்வு செய்தோம் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது. வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் உள்ளே வந்து பார்வையிட வசதியாக அவர்களுக்கு தனியாக பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்டுப்பாட்டு அறை வரை செல்லலாம் சீல் வைக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம் சீல் வைக்கப்பட்டுள்ளதற்கு பக்கத்தில் செல்லக்கூடாது அதே போன்று கட்டுப்பாட்டு அறையில் உள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்பது ஏஜெண்டுகள் காணலாம் என்றார்.
சுரேஷ்குமார் (மாவட்ட கலெக்டர்)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.