ETV Bharat / state

கரையை கடந்த நிவர் புயல்: இயல்பு நிலைக்கு திரும்பிய நாகப்பட்டினம் - nagapattinam back to normal

நாகப்பட்டினம்: நிவர் புயல் கரையை கடந்ததைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தில் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது.

இயல்பு நிலைக்குத் திரும்பிய நாகப்பட்டினம்

author img

By

Published : Nov 26, 2020, 12:23 PM IST

நிவர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து நாகப்பட்டினத்தில் எட்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆதலால் சுமாராக ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடற்கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன.

இன்று அதிகாலை (நவ.26) புதுச்சேரி அருகே நிவர் புயல் கரையை கடந்தது. இதைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தில் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. குறிப்பாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த எட்டாம் எண் புயல் கூண்டு இறக்கப்பட்டது.

இயல்பு நிலைக்குத் திரும்பிய நாகப்பட்டினம்!

தற்போது குறைந்த அளவே மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வெளியே வர தொடங்கியிருக்கின்றனர். இருப்பினும் புயலின் தாக்கம் குறிப்பிட்ட நேரத்திற்கு இருக்கும் என்பதால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் மறு உத்தரவு வரும்வரை முகாம்களில் தங்கயிருக்க வேண்டும் என நாகப்பட்டின மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.