கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் வீடுகளில் இருக்க முடியாமல் இளைஞர்களும், மாணவர்களும் அநாவசியமாக தெருக்களில் உலாவருதல், மைதானங்களில் விளையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு கரோனா அச்சத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்திவருகின்றனர்.
இவர்களுக்கு விதிவிலக்காக நாகையில் உள்ள ஒரு சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் மக்களுக்கு உதவும் வண்ணம் தங்களை ஒன்றிணைத்து தன்னார்வ பணிகளில் ஈடுபடுத்திவருகின்றனர்.
'நாகை உதவும் கரங்கள்' என்ற வாட்ஸ்அப் குழுவினை ஆரம்பித்து அதன்மூலம் பலரிடமிருந்து உதவிகளைப் பெற்று, ஆதரவற்று உணவின்றி வீதிகளில் திரியும் முதியவர்களுக்கு முகக்கவசம், உணவு, பழம், பிஸ்கட், தண்ணீர் உள்ளிட்டவைகளை வழங்கிவருகின்றனர்.
இவர்களின் இந்தச் செயல் கரோனா தொற்றை ஏற்படுத்தும்விதமாக திரியும் பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாகக் கூறி பலரும் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க... முதியவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் திருச்சி சரக காவல் துறை!