ETV Bharat / state

இளைஞர்களை அடித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காவலர்கள்... - நாகை க்ரைம் செய்தி

நாகை: மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்களை போக்குவரத்து காவல் துறையினர் தாக்கியதுடன் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

nagai-to-mayiladuthurai-traffic-police-attacked-3-youngsters
மருத்துவனையில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள்
author img

By

Published : Feb 21, 2020, 7:06 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் நேற்று (பிப்ரவரி 20) இரவு 8 மணிக்கு போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது ரயில் மேம்பாலத்துக்கு அடியிலிருந்து ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்களை நிறுத்த சொல்லியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் நிறுத்தாததால் உதவி ஆய்வாளர் மூர்த்தி என்பவர் தன் கையில் வைத்திருந்த லத்தியால் பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்த சுரேந்தா (23) முதுகில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்த மூன்று பேரும் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாயினர்.

இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய கணேஷ்குமாரின் (22) கை தேய்ந்து காயம் ஏற்பட்டது. நடுவில் உட்கார்ந்திருந்த விக்னேஷ்க்கும் (23) காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தை பார்த்து கூட்டம் கூடியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது.

மேலும் சம்பவ இடத்தில் இருந்து போக்குவரத்து காவல் துறையினர் கூட்டத்தை கலைத்து, காயமடைந்த அவர்கள் மூவரையும் உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் அனுப்பிவைத்தனர்.

அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் அங்கிருந்து தனியார் மருத்துவனைக்கு அந்த மூன்று இளைஞர்களையும் போக்குவரத்து காவலர்களுடன் சம்பவம் குறித்து அறிந்து அப்பகுதிக்கு வந்த காவல் துறையினரும் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.

சாலை திருப்பத்தில் இருசக்கர வாகனம் வந்ததால் காவலர்கள் நிற்பதை தாங்கள் கவனிக்கவில்லை என்று காயமடைந்த இளைஞர்கள் கூறினர். சம்பவம் தொடர்பாக இளைஞர்களின் உறவினர்களிடம் காவல் துறையினர் சமரசம் பேசிவருகின்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவனையில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள்

இதையும் படிங்க: காதலி சொன்னதுபோல் வராத ஆத்திரம் - போலீஸ் பூத் மீது குண்டு வீசிய காதலன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.