ETV Bharat / state

14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு: முறையாக விசாரிக்கவில்லை என கிராம மக்கள் புகார்! - 14வயது சிறுமி பல முறை பாலியல் வன்புணர்வு வழக்கு

நாகை: 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், காவலர்கள் முறையாக விசாரணை செய்யவில்லை என்று கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

14வயது சிறுமி பல முறை பாலியல் வன்புணர்வு வழக்கு: முறையாக காவல் துறை விசாரிக்கவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டு!

author img

By

Published : Jul 24, 2020, 8:33 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட வரதம்பட்டு ஊராட்சியில் 9ஆம் வகுப்பு படிக்கும் 14வயது சிறுமி, தொடர்ந்து பலரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதில் கர்ப்பமடைந்த அச்சிறுமிக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் அளித்தனர்.

மாவட்ட சமூக பணியாளர் ஆரோக்கியராஜ் மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் அக்காள் கணவர் வைத்தீஸ்வரன்கோவிலைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை தகாத உறவு வைத்திருந்ததும், இதில் சிறுமி கர்ப்படைந்ததைத் தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்துகொண்டதும் இச்சம்பவத்திற்கு சிறுமியின் தாயே உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்தது.

மேலும் சிறுமியிடம் தொடர்பிலிருந்த பலர் மீது போக்சோ சட்டம், குழந்தைகள் திருமண தடை சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமியின் அக்காள் கணவர் தினேஷ்சை கைது செய்து மேலும் மூன்று நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வரதம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் காவல் துறையினர் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

சிறுமியின் தந்தை கலியமூர்த்தி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தாய் மாரியம்மாளும் துப்புறவ பணியாளராக உள்ளார். இவர்களின் 3 பெண் பிள்ளைளில் இருவருக்கு திருமணம் செய்யப்பட்டுள்ள நிலையில் கடைசி மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

மாரியம்மாளின் தவறான நடத்தையால் 2013ஆம் ஆண்டு தந்தை கலியமூர்த்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், பணத்திற்கு ஆசைப்பட்டு தாயின் தவறான வழிகாட்டுதலால் சிறுமி பலரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.

மேலும், திருமணம் ஆகாத தன் மகளின் கர்ப்பத்தை கலைப்பதற்காக தாலியை கட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், சிறுமியின் அக்காள் கணவர் தினேஷ் மீது தவறில்லை எனவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த விவகாரத்தில் காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க...சன் ஃபார்மா விரிவாக்கத்துக்கு தடை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.