நாகை அடுத்துள்ள ஒரத்தூர் பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் சார்பாக அமையவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு நாளை மறுநாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைக்க வருகை தரவுள்ளார்.
இதன் காரணமாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலை அமைத்தல், பிரமாண்ட பந்தல் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் பணிகளை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஓ.எஸ்.மணியன் இன்று ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், " முதலமைச்சர் வருகையை முன்னிட்டு முன்னேற்பாட்டுப் பணிகள் எளிமையாகவும், சிறப்பாகவும் நடைபெற்று வருகிறது.
செய்து முடிக்கப்பட்ட பணிகளையும், புதிய அரசுப் பணிகளையும் தொடங்குவதற்காகவும் அவர் வரவுள்ளார். தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டமான நாகையில் புதிய மருத்துவக் கல்லூரி அமையவுள்ளது வரலாற்றில் ஒரு மைல் கல்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரஜினிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்?