தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டுவருகின்றது. உழவுக்கு உதவி செய்யும் உற்ற நண்பனான மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டுவருகின்றது.
நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த வாணதிராஜபுரத்தில், கோசாலை அமைந்துள்ளது. அங்கு ஆதரவற்ற மாடுகள், பால் அற்றுப்போய் அடிமாட்டிற்கு விற்கப்படும் மாடுகள், முதுமையடைந்த மாடுகள் உள்ளிட்ட மாடுகள் கொண்டுவந்து பராமரிக்கப்படுகின்றன.
சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு பூஜை நடைபெற்றது. விழாவில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மாடுகளுக்கு பூஜைசெய்து , உணவு அளித்தனர்.
இதையும் படிங்க: பொங்கலன்று மட்டுமே பகலில் திறக்கப்படும் கோயில்