ETV Bharat / state

கரோனா முன்னெச்சரிக்கை: கடலுக்குச் செல்லாத மீனவர்கள் - Nagai Corona Precautions

நாகை: கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாகையில் மூன்று கிராம மீனவர்கள் மீன்பிடித் தொழிலை நிறுத்தியுள்ளனர்.

மீனவர்கள் வேலை நிறுத்தம்
மீனவர்கள் வேலை நிறுத்தம்
author img

By

Published : Mar 19, 2020, 11:00 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் நாகை மீன்பிடித் துறைமுகம், மீன் ஏலக் கூடங்கள், மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், நாகை வட்டத்துக்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாறு ஆகிய 3 கிராம மீனவர்கள் இன்று மாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை நிறுத்தியுள்ளனர்.

மீனவர்கள் வேலை நிறுத்தம்

மேலும், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை உடனே கரை திரும்பவும் மீனவ பஞ்சாயத்தார்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நாகையில் தங்கி மீன்பிடித் தொழில் ஈடுபடும் கேரள மீனவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா அச்சம்: உணவு விடுதிகளில் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.