ETV Bharat / state

சின்னமேடு மீனவ கிராமம் கடலில் மூழ்கும் அபாயம்! நடவடிக்கை எடுக்க கடலில் குதித்த மக்கள்! - மீனவர்கள் கடலில் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பட்டம்

நாகப்பட்டினம்: கடல் அரிப்பை தடுக்க வலியுறுத்தியும், தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தியும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கருப்புக் கொடியுடன் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

மீனவர்கள் கடலில் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பட்டம்  nagai fishermen protest
சின்ன மேடு மீனவர் கிராமத்தினர் போராட்டம்
author img

By

Published : Dec 19, 2019, 3:01 PM IST

Updated : Dec 19, 2019, 4:11 PM IST

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்ன மேடு மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் கடலரிப்பு ஏற்பட்டு கடல் நீர் வீடுகளில் புகும் அபாயம் நிலவுகிறது. சின்ன மேடு மீனவ கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 250 பேர் பைபர் படகு, கட்டுமரங்கள் மூலம் மீன்பிடி தொழிலைச் செய்துவருகின்றனர்.

சமீபகாலமாக இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தால் கரைப்பகுதி அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் கரையோர வீடுகளில் வசிக்கும் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்போது கடல் சீற்றம் அதிகமானதால் இப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 300 மீட்டர் அளவில் கடலரிப்பு ஏற்பட்டு கரையோரத்தில் போடப்பட்டு இருந்த காங்கிரீட் சாலை கடலில் அழைத்துச் செல்லப்பட்டது.

சீமானுக்கு டஃப் கொடுக்குறீங்க நித்தி - செந்தில் குமார் எம்.பி., கலாய்!

மேலும், தற்போது கடற்கரையிலிருந்து மீனவர்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதி 10 மீட்டர் தொலைவில் இருப்பதால், எந்த நேரத்திலும் கடல் சீற்றத்தால் கிராமம் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் அரிப்பால் சேதம் அடைவதாகவும் மீனவ மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

போராட்ட எதிரொலி: கர்நாடகா மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு

இதுகுறித்து பலமுறை அரசு அலுவர்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு மீனவர்கள் கறுப்புக் கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Intro:சின்ன மேடு மீனவர் கிராமம் கடல் அரிப்பால் கடலில் மூழ்கும் அபாயம். கருங்கற்களைக் கொட்டி கடல் அரிப்பை தடுக்க வலியுறுத்தியும், தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தியும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கருப்புக் கொடியுடன் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்:-

Body:நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சின்ன மேடு மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் கடலரிப்பு ஏற்பட்டு கடல் நீர் வீடுகளில் புகும் அபாயம் நிலவுகிறது. சின்ன மேடு மீனவ கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் சுமார் 250 பேர் பைபர் படகு மற்றும் கட்டுமரங்கள் மூலம் மீன்பிடி தொழிலை செய்துவருகின்றனர்.
சமீபகாலமாக இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தால் கரைப்பகுதி அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் கரையோர வீடுகளில் வசிக்கும் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர் தற்போது கடல் சீற்றம் அதிகமானதால் இப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.
கடந்த 10 நாட்களில் மட்டும் 300 மீட்டர் அளவில் கடலரிப்பு ஏற்பட்டு கரையோரம் போடப்பட்டு கான்கிரீட் சாலை கடலில் அழைத்துச் செல்லப்பட்டது.
மேலும் தற்போது கடற்கரையிலிருந்து மீனவர்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதி 10 மீட்டர் தொலைவில் இருப்பதால் எந்த நேரத்திலும் கடல் சீற்றத்தால் கிராமம் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் அரிப்பால் அடைகிறது இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு மீனவர்கள் கருப்புக் கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

பேட்டி:- 1, கலாவதி - மீனவ பெண்.
2, சேகர் - மீனவர் சின்னமேடு.

Conclusion:
Last Updated : Dec 19, 2019, 4:11 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.