ஜேஇஇ, நீட் நுழைவுத் தேர்வுகளை காரைக்காலில் இருந்து புதுச்சேரி, கடலூர் மையங்களுக்குச் சென்று எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்ககோரி அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் காரைக்காலில் இருந்து சிறப்புப் பேருந்து போக்குவரத்து வசதி செய்யப்படவுள்ளது.
புதுச்சேரி மாநிலம் சாலை போக்குவரத்துக் கழகம் மூலம் தேர்வு நடைபெறும் நாள்களில் அதிகாலை 3 மணி மற்றும் காலை 8 மணிக்கு காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுத் தேர்வு மையங்களுக்குச் சென்று, தேர்வு முடிந்தவுடன் மாணவர்களைத் திரும்ப அழைத்துவரும் வகையில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுடன் பெற்றோரும் செல்லலாம் என்றும், பேருந்து மூலம் தேர்வு மையத்துக்குச் செல்ல விரும்பும் ஜேஇஇ தேர்வெழுதவுள்ள மாணவர்கள் ஆகஸ்ட்-27க்குள், நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் செப்டம்பர் 8ஆம் தேதிக்குள் 04368-228801, 227704 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் ஷர்மா தெரிவித்துள்ளார்.