கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ஊரடங்கு உத்தரவிற்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பிழைப்புக்காக வந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 140 பேர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், நாகூர் தனியார் பள்ளி உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ள அவர்களுக்கு நகராட்சி சார்பாக உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும், நாகூர் ரயில்வே நிலையத்தில் தங்கி நாகப்பட்டினம் சுற்றுப்புற பகுதிகளில் மூலிகை எண்ணெய் விற்பனை செய்து வந்த வத்தலகுண்டு நாகலாபுரத்தைச் சேர்ந்த 18 பேர் மருத்துவ பரிசோதனை முடிந்து விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளார்கள் என்று மாவட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா நிவாரண டோக்கன் பெற முண்டியடித்து வந்த மக்கள்!