மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தியாகராஜன் நகரைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் ஏலசீட்டு நடத்தினார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் மட்டும் வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அவரது மனைவி சாந்தி (55), மகன் ராமு (27) ஆகிய இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ராமு பெட்டிக்கடை நடத்திவந்தார். சீட்டு பணம் கட்டிய நபர்கள் பணம் கேட்டு தாயையும் மகனையும் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக தாய், மகன் ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த சீர்காழி காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை!